கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக - ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!
Jan 18, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோசியல் மீடியா இன்புளுயன்சர்களுக்குப் பணத்தை கொடுத்து முப்பெரும் விழாவை  பெருமையாக பேச வைத்திருக்கும் திமுகவின் செயல்பாடு அம்பலமாகியுள்ளது. பணத்தோடு திமுகக் கொடுத்த ஒரே கண்டண்டையே அனைவரும் பேசி வீடியோ வெளியிட்டதால் இன்புளுயன்சர்களும் சிக்கிக்கொண்டு முழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

என்னடா… எல்லாரும் திமுக முப்பெரும் விழாவை பத்தியே பேசுறாங்களேனு நினைக்கிறாங்களா? காசு கொடுத்துப் பேச சொன்னா பேசி தானே ஆகணும்.

நாம் வீடியோவில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே சோசியல் மீடியா இன்புளுயன்சர்ஸ். மில்லியன் அளவில் பாலோவர்ஸ் வைத்திருக்கும் இவர்களை நகைக்கடைகள், துணிக்கடைகள், பெரிய, பெரிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறார்கள்.

சோசியல் மீடியா இன்புளுயன்சர்களில் பெரும்பாலானோரின் வருமானமும், வாழ்வாதாரமும் விளம்பரத்தை நம்பியே இருக்கிறது. அப்படி இருப்பவர்களுக்கும் திமுகவின் முப்பெரும் விழாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தானே கேட்கத் தோன்றுகிறது. இவர்களுக்கும் திமுக முப்பெரும் விழாவுக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் பணம் மட்டுமே.

திமுகவின் முப்பெரும் விழா அண்மையில் கரூரில் நடைபெற்றது. திமுகவின் கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் முப்பெரும் விழாவிற்கான அத்துணை ஏற்பாடுகளையும் செய்திருந்தார். விழாவிற்குத் தொண்டர்களின் வருகை எதிர்பார்த்த அளவிற்கு வராத நிலையில், மழையும் குறுக்கிட்டு முப்பெரும் விழாவை நாசமாக்கியது.

முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுக்கும் போதே புடவை மற்றும் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் வருகையின் போது பெரும்பாலான இருக்கைகள் காலியானதாகவே காட்சியளித்தது. இரண்டு லட்சம் தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் கூடியிருந்த சில ஆயிரம் தொண்டர்களும் முதலமைச்சர் பேசுவதற்கு முன்பாகவே கலைந்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதுவரை இல்லாத அளவிற்கு முப்பெரும் விழா நடைபெற்றிருப்பதாக முதலமைச்சர் மேடையில் பெருமையாகப் பேசினாலும், தொண்டர்களின் வருகை மிகக்குறைவாக இருந்ததால் கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே முதலமைச்சரின் மனதைக் குளிரவைக்கும் வகையில், ஏற்கனவே ஊடகங்கள், நாளிதழ்கள், இணையதளங்கள் எனப் பல கோடி ரூபாய் அளவிற்குத் தொகையை செலவழித்த செந்தில்பாலாஜி அடுத்தகட்டமாக இன்புளுயன்சர்ஸ்களுக்கும் கணிசமாகத் தொகையை கொடுத்து முப்பெரும் விழா பற்றி பெருமையாகப் பேசி வீடியோ வெளியிட சொன்னது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்புளுயன்சர்களை பொறுத்தவரையில் கொடுத்த தொகைக்கு உண்டான வேலையை பார்ப்பார்கள் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகைய கொடுத்துக் கரூரில் ஒரு தரமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது என்பதைப் போல வீடியோ வெளியிட வேண்டும் எனச் செந்தில்பாலாஜி தரப்பு உத்தரவிட, இன்புளுயன்சர்கள் அனைவரும் ஒரே கண்டண்டை பேசி சிக்கிக்கொண்டனர்.

பிரபல இன்புளுயன்சர்களாகக் கருதப்படும் இவர்கள் அனைவரும் திமுக முப்பெரும் விழா நடைபெற்று முடிந்த மறுநாள் ஒரே கண்டண்டை அடுத்தடுத்து பதிவு செய்வதைக் கண்டுபிடித்த சமூக வலைதளவாசிகள் அவற்றை ஒன்றாக இணைத்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுத் திமுகவின் புதுவகை விளம்பர யுக்தியை அம்பலப்படுத்தியுள்ளனர்.

மாநாடு நடத்துவதற்காகப் பல கோடி செலவு செய்தும் பலனளிக்காத நிலையில், இன்புளுயன்சர்களை வைத்து நடத்திய விளம்பர நாடகமும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. திமுகவின் விழாவை பணம் வாங்கிவிட்டு பெருமையாகப் பேசி இன்புளுயன்சர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Tags: திமுக முப்பெரும் விழாDMKdmk newsDMK Influencers caught talking about a quality incident in Karur for moneyசோசியல் மீடியா இன்புளுயன்சர்
ShareTweetSendShare
Previous Post

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

Next Post

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies