நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
Oct 15, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை நேரடியாக விமர்சித்துப் புகைச்சலை வெளிப்படுத்தி இருக்கிறது ட்ரம்பு தரப்பு.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங், அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சண்டைக்கு முடிவுக் கட்டி, மக்களைப் பாதுகாத்த ஒப்பற்ற மனிதரையா புறக்கணிக்கிறீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மலையையே அசைத்துப் பார்க்கும் குணம் கொண்டவராகவும், மனிதநேய பண்பாளராக இருக்கும் அதிபர் ட்ரம்புக்கு நிகர் எவரும் இல்லை என்றும் மரியா கொரினா மச்சாடோவை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஆனால் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவை பொறுத்த வரையில், அதிபர் ட்ரம்ப் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக இருக்கிறார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அதிபர் ட்ரம்ப் துணை நிற்கிறார் என ஒருமுறை, இருமுறையல்ல… பலமுறை பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நடப்பாண்டில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட, வெனிசுலாவுக்கு ஆதரவளிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் துணை நிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு காலமுழுக்க நன்றி கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதுமட்டுமல்ல, டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வானபோது கூட, மச்சாடோ மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார். இப்படி ட்ரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமெரிக்க அரசு நிர்வாகத்தினர் கூறும் கருத்துகள் காயம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

இத்தனை ஆண்டுகள் காயத்திற்கு மருந்திட்டு வந்தவர்கள், ஒரு பரிசுக்காக இப்படி வசைபாடு தொடங்கிவிட்டார்களே என கவலை தெரிவிக்கின்றனர் மச்சாடோ ஆதரவாளர்கள்.

Tags: americausaDonald TrumpNobel Peace PrizePolitics in Nobel Prize announcement?: US President Trump in a tizzy
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

Next Post

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

Related News

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies