சீனாவின் பிரபல தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இதனால் பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.
இந்தப் போட்டியில் உலக நாடுகளை சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதன்முறையாகப் பறக்கும் பேட்டரி காரைத் தயாரித்துள்ளது.
ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் காருக்கு, எக்ஸ் 2 என எக்ஸ்பெங் நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதிகபட்சமாக 170 கிலோகிராம் எடையைத் தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.