இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிர செய்தவர் பாரததயார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதிவில், மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
அவரது சிந்தனை எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின என்றும், இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டார் என்றும், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றும் அவர் கூறினார்.
















