உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக ப்ரொபஷனல் பிரிவு சார்பில் நடைபெற்ற ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அந்தமானில் புதிதாக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெண்களை மையமாக வைத்து முன்னேற்றம் என்பது, பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்று பிரதமர் மோடி ஆட்சியில் மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், 80 சதவீத கிராமபுற பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
















