மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், என்.டி.ஏ கூட்டணி மீதான மக்களின் பிணைப்பை தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்பாடுகள் மக்கள் மனதை வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், மகாராஷ்டிர மாநில மக்கள் நலனுக்காக பாடுபட்ட பாஜகவினரை கண்டு பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியினரின் பொய்களை பாஜக திறம்பட முறியடித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
















