தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர். திரும்பும் திசையெல்லாம் சாரை சாரையாக வந்த தொண்டர்களால் மதுராந்தகம் நகரமே ஸ்தம்பித்தது. மேலும் தொண்டர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தால் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தனர்.
பின்னர் பொதுக்கூட்டம் முடிந்தபின் தொண்டர்கள் அனைவரும் நாற்காலிகளை அடுக்கி வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

















