மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருவர், தனது கையில் பிரதமர் மோடியின் தாயின் படத்தை உயர்த்திப் பிடித்துக் காட்டியபடி இருந்தார்.

அதனை பார்த்த பிரதமர் மோடி, சிறுமியின் அன்பு தனக்குக் கிடைத்து விட்டதாக கூறினார். மேலும், அந்தப் படத்தில் பெயர் மற்றும் முகவரியை மட்டும் எழுதி கொடுத்துவிடு, கண்டிப்பாகத் தனிப்பட்ட முறையில் உனக்கு ஒரு பாராட்டு மற்றும் ஆசி கடிதத்தை அனுப்பி வைக்கிறேன் என்றும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
















