வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் நகராட்சியில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது.
இருப்பினும், மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் இருப்பதை கண்டித்து. வரும் 27-ம் தேதி போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் வேலூர் தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வரும் 26ஆம் தேதி மருத்துவமனை திறக்கப்படும் என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
















