தமிழகத்தில் கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுப்பதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய ஏற்ற இடமாக இருந்தது என்றும், தற்போது மக்கள் வாழ முடியாத சூழலை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார் என்றும் தெரிவித்தார்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரால் ஏன் கஞ்சா போதையை ஒழிக்க முடியவில்லை? எனறும் முதலமைச்சருக்கு எதிராக பேசினால் காவல்துறையினர் வீட்டை உடைத்து வந்து கைது செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















