ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? - சிறப்பு கட்டுரை!
May 2, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான அவாக்ஸ் AWACS விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஈரான் போரில் அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் ஈரான் போரால், உலக எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அந்நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதே வேளையில், மேற்கு ஆசியாவில் ஈரான் மீது தரைவழித் தாக்குதலை நடத்தவும் ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் கைப்பற்றவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான ‘தி டெஹ்ரான் டைம்ஸின் முதல் பக்கத்தில் “நரகத்துக்கு வரவேற்கிறோம் எனத் தலைப்பிட்டு, ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை எந்தவொரு தரைவழிப்படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது போர் இலக்குகளை அடைய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சவூதி தலைநகர் ரியாத்தில் இருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தைக் குறிவைத்து ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 29 ட்ரோன்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், இந்த விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான E-3G Sentry அவாக்ஸ் (AWACS) விமானங்கள் ஆறில் ஒன்று முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த E-3 அவாக்ஸ் விமானம், ஏவுகணைகள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்கவும், போர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும் வான்வழி முன் எச்சரிக்கை விமானமாகும்.

“வானத்தில் அமெரிக்காவின் கண்” என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மிக முக்கியமான உளவு மற்றும் வழிகாட்டுதல் விமானம் இதுவாகும்.

எரிபொருள் நிரப்பத் தேவைப்படாமலேயே எட்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வானில் பறக்கும் திறன் கொண்டதாகும்.

இக்காரணங்களினாலேயே, அமெரிக்காவின் வழக்கமான ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற சொத்துக்களில் ஒன்றாக E-3 AWACS விமானம் கருதப்படுகிறது.

1977-ல் உருவாக்கப்பட்ட அவாக்ஸ் AWACS விமானங்கள், ‘Operation Desert Storm’, கொசோவோ போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள், மற்றும் ‘Operation Inherent Resolve’ என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிரானப் போர் எனப் பல முக்கியப் போர்களில் தீர்க்கமானவெற்றியை அமெரிக்காவுக்குப் பெற்று தந்துள்ளது.

இந்த விமானத்தின் உட்புறத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ரேடார் 375 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருப்பதால் எதிரி நடவடிக்கைகளை குறித்த சூழ்நிலை விழிப்புணர்வையும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புப் பகுதியின் மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டையும் துல்லியமாக வழங்கிறது.

அமெரிக்க விமானப்படையிடம் தற்போது பதினாறு E-3 Sentry அவாக்ஸ் விமானங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான்வழி கண்காணிப்புத் திறனைப் பெருமளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இத்துடன் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் பல விமானங்களும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 15 அமெரிக்கப் படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சேதத்தின் அளவு அல்லது உயிரிழப்புகளை உறுதிப்படுத்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா குறிப்பிடத்தக்க ராணுவ இழப்புகளை சந்தித்து வருகிறது. ஈரானின் தாக்குதலில் 12 MQ-9 ரீப்பர் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளது. ஒரு அமெரிக்க F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

Tags: iran us bases attackiran attacksayatollah ali khamenei deadiran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackPrince Sultan Air Basesaudi arabiairan attack on dubaiAWACS aircraftusus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesAYATOLLAH ALI KHAMENEI
ShareTweetSendShare
Previous Post

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies