டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகளும், உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரகசிய அமைப்புகளும் இணைந்து செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கினர்.
20 நாட்களாக அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த சிஜேபியின் போராட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு வன்முறையாக வெடித்தது.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை, போலீசார் கட்டுப்படுத்த முயற்சித்தபோது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தை தூண்டிவிட்ட சிஜேபி தலைவர் மற்றும் நிர்வாகிகள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்லாமல் ஆங்காங்கே பதுங்கி கொண்டதாகவும்,போராட்டத்தில் கலந்து கொண்ட ஒழுங்குபடுத்தப்படாத கும்பல், போலீசாரை எதிர்கொண்டு கல் வீசியதால் டெல்லியின் பல இடங்கள் போர்க்களமாக மாறியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய சிஜேபி-யினர் பின்னர் திசைமாறி சென்றதாகவும்,மதமாற்ற அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதே போராட்ட கும்பலின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
திடீர் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகளும், உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரகசிய அமைப்புகளும் இணைந்து செயல்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டெல்லி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் ரயில் மீது போராட்ட கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும்,நாட்டுக்குப் பெருமை சேர்த்த ரயிலை சேதப்படுத்துவதில் இருந்தே இந்த கும்பலின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்களில் பலர் கோஷம் எழுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















