டெல்லியில் மாணவர்கள் போர்வையில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ‘டீப் ஸ்டேட்’ எனப்படும் சர்வதேச நாடுகளின் சதி பின்னணி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக நாடுகளில் சதி கோட்பாடுகளின் உந்து சக்தியாக இருக்கும் இந்த ‘டீப் ஸ்டேட்’ (Deep State) பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
“டீப் ஸ்டேட்” என்ற சொல் கடந்த சில ஆண்டுகளாக உலக அரசியல் விவாதங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அப்பால், நிரந்தர நிர்வாக அமைப்புகள், உளவுத்துறைகள் அல்லது அதிகார மையங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் மறைமுக செல்வாக்கு செலுத்துகின்றன என்ற கருத்தின் அடிப்படையிலேயே இந்தக் கோட்பாடு உருவானதாகக் கூறப்படுகிறது.
ஒரு நாட்டின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தாண்டி, பின்னணியில் இருந்து மறைமுகமாக அந்நாட்டில் அதிகாரத்தைச் செலுத்தும் நிழல் குழுக்கள் தான் இந்த “டீப் ஸ்டேட்” ஆகும்.
2025 ம் ஆண்டு தொடங்கி ‘டீப் ஸ்டேட்’ (Deep State) என்ற சொல் நாட்டில் பயன்படுத்தப்படும் சொற்களில் பெரும் அந்தஸ்த்தைப் பெற்று முன்னணியில் உள்ளது. கயமை கொண்ட கபடதாரிகளை இந்த டீப் ஸ்டேட் என்ற சொல் குறிக்கிறது. இது ஒன்றும் வெறும் கற்பனை அல்ல. SHALLOW STATE ( ‘ஷேலோ ஸ்டேட்’) மற்றும் NON STATE (‘நான்-ஸ்டேட்’ ) போலவே ‘டீப் ஸ்டேட்’ என்பதும் மக்கள் வாழ்க்கையிலும், நாட்டின் நிர்வாக அமைப்பிலும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இந்த டீப் ஸ்டேட் உடன் இணைந்து உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஜனநாயக வளர்ச்சி, பொருளாதார உதவி, மத நல்லிணக்கம் என்று இனிக்க இனிக்கப் பேசும் இந்த டீப் ஸ்டேட்டின் வார்த்தைகளுக்குப் பின்னால் அந்த நாட்டைத் தங்களின் நிரந்தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மறைமுகத் திட்டம் நிறைந்திருக்கும்.
எப்படி இந்த டீப் ஸ்டேட் செயல்படுகிறது என்பதை நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
முதலில் தாங்கள் குறிவைக்கும் வளரும் நாடுகளில் உள்ள அறிவார்ந்த மற்றும் துடிப்பான இளைஞர்களை அதிலும் நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய, சமூக ஊடகங்களில் ஆளுமை செலுத்தக்கூடிய, மக்களிடம் எளிதாகப் பழகக்கூடிய திறமையான இளைஞர்களை அடையாளம் காண்கிறார்கள்.
பிறகு அவர்களுக்கான சர்வதேச அளவிலான Fellowship, Exchange Programs மற்றும் உயர் கல்விக்கான முழு உதவித்தொகைகளை அள்ளிவழங்கி, தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச ஊடகங்கள் மூலம் அந்த இளைஞர்களை “எதிர்காலத் தலைவர்”, “புதிய தலைமுறை சிந்தனையாளர்”, “மாற்றத்தின் நாயகன்” எனத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார்கள். இந்த மாயப் பிம்பத்தைப் பார்த்து அந்நாட்டு இளைஞர்களும் மக்களும் தங்களைக் காப்பாற்ற வந்த தேவதூதர்கள் இவர்களே என்று நம்ப வைக்கின்றனர்.
சமீபத்தில், யுஎஸ்எய்ட் (USAID) ‘இன்டர்நியூஸ் நெட்வொர்க்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து வருவதை wikileaks, அம்பலப்படுத்தியுள்ளது.
இன்டர்நியூஸ் என்பது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ஒரு ஊடக ஆதரவு அரசு சாரா அமைப்பு (NGO) ஆகும்.
இந்த இன்டர்நியூஸ், 4000-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, இடதுசாரி சித்தாந்தம் மற்றும் அமெரிக்க அரசின் பிரச்சாரம் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இதன் 4000 ஊடக மையங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன, அவற்றில் ஒன்று இந்தியாவிலும் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ‘இன்டர்நியூஸ் நெட்வொர்க்’ கின் ஆதரவுடன் டெல்லியைத் தளமாகக் கொண்ட டேட்டா லீட்ஸ் (DataLeads) என்ற ஊடக நிறுவனம் செயல்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சையத் நஸாகத் தான் இதை ஆரம்பித்துள்ளார்.
இந்த சையத், ஃபோர்டு மற்றும் சோரோஸ் நிதியுதவி பெறும் பத்திரிகையாளர் குழுக்களான குளோபல் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் நெட்வொர்க்கின் (Global Investigative Journalism Network) நிர்வாகக் குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்டர்நியூஸ் நெட்வொர்க்’ கின் இந்தியப் பயிற்சித் திட்டத்தின் பெயர் ஃபேக்ட்ஷாலா (FactShala) ஆகும். இந்த இந்தியத் திட்டத்திற்கு கூகுளும் ஆதரவளிக்கிறது.
இந்த இந்தியப் பயிற்சித் திட்டங்கள் அனைத்தும் பிரசாந்த் பூஷனுக்குச் சொந்தமான சம்பாவ்னா இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி அண்ட் பாலிடிக்ஸ் (SIPP) மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
ரவிஷ் குமார், நக்சலைட் சோரி சோரி, அப்ர்னா தேவல், கவிதா கிருஷ்ணன்,ஆகாஷ் பானர்ஜி,சந்தீப் சௌத்ரி என இந்தியாவில் எந்த இடதுசாரி சூழலுடன் தொடர்புடையவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டாலும் அந்தப் பெயர்களை சம்பாவ்னா நிறுவனத்தில் காண முடியும்.
INTERNEWS-ன் நன்கொடையாளர் பட்டியலில் Ford Foundation,Rockefeller Brothers Fund ,Rockefellers Family fund ,Rockefeller Foundation ,Open Society Foundation ,Oak Foundation ,MacArthur Foundation Democracy Fund,Omidyar Network மற்றும் Skoll Foundation ஆகியவை உள்ளன.
USAID அமைப்பின் மூலமாக டீப் ஸ்டேட் இந்தியாவில் 2500 ஒர்க் ஷாப்கள் நடத்தி 75,000-க்கும் மேலான இளைஞர்களுக்கு ஊடகத்துறையில் பயிற்சி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பரப்பும் இந்த யுஎஸ்எயிட் சார்ந்த அமைப்புகள் இந்தியாவில் பணத்தை தண்ணீராக வாரிரைத்துள்ளன. வாங்கிக் கொண்ட பணத்துக்கு விசுவாசமாக நாடு முழுவதும் தாய் நாட்டிற்கு எதிரான விஷக் கருத்துக்களை இந்த இளைஞர்கள் பரப்பி வருகின்றனர்.
இடதுசாரி சித்தாந்தம், ஊடகங்கள் முதல் கல்வி மற்றும் கலைகள் வரை இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இப்படித் தான் ஊடுருவியுள்ளது.
அடுத்த கட்டமாக மனித உரிமைகள் அமைப்பு (Human Rights Organizations), மாணவர் சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) என்ற பெயரில் புதிய குழுக்களை உருவாக்கிய பின்னர் சரியான நேரம் வரும்போது, “மாற்று அரசியல்”, “ஊழலற்ற ஆட்சி” என்ற முழக்கத்தோடு இந்த இளைஞர்கள் புதிய கட்சிகளைத் தொடங்குவார்கள் அல்லது முக்கியக் கட்சிகளில் பெரிய பொறுப்புகளுக்குக் கொண்டுவரப்படுவார்கள்.
இந்த டீப் ஸ்டேட் இளைஞர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பிரம்மாண்டமான ஊடக விளம்பரங்களுக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளில் வெளிநாட்டு நிதி பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தேர்தலில் செலவழிக்கப் படும்.
இறுதியில், மக்களின் வாக்குகளைப் பெற்று டீப் ஸ்டேட்டின் இளைஞர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள். அப்பாவி நாட்டு மக்களோ தங்கள் வாக்குகளால் ஆட்சி மாற்றம் வந்ததாக நினைப்பார்கள். உண்மையில் தாங்கள் கொண்டுவர நினைத்த பொம்மை ஆட்சியை “டீப் ஸ்டேட்” கொண்டு வந்திருக்கும்.
அதன் பிறகு “டீப் ஸ்டேட்” தனது உண்மையான ஆட்டத்தை நாட்டில் தொடங்கும். IMF, World Bank போன்ற அமைப்புகள் மூலம் பெருமளவில் கடன்களை வழங்கி, “பொருளாதாரச் சீர்திருத்தம்” என்ற பெயரில் அந்த நாட்டின் இறையாண்மையைச் சீர்குலைப்பார்கள். மேலும், அந்த நாட்டின் எண்ணெய், கனிம வளங்கள், வேளாண் உற்பத்தி என அனைத்தும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குத் தாரை வார்த்து கொடுக்கப்படும். தனியார்மயம் என்ற பெயரில் நாட்டின் பொதுச்சொத்துக்கள் சூறையாடப் படும்.
இன்னொரு புறம் மனித உரிமை , ஜனநாயகம் என்ற பெயரில் அந்நாட்டு அரசில் டீப் ஸ்டேட் தங்கள் கொள்கைகளைத் திணிப்பார்கள்.
2003-ல் ஜியார்ஜியாவில் நடந்த ரோஸ் புரட்சி, 2004-ல் உக்ரைனில் நடந்த ஆரஞ்சுப் புரட்சி 2005-ல் கிர்கிஸ்தானில் நடந்த துலிப் புரட்சி என வளரும் நாடுகளில் டீப் ஸ்டேட் நடத்திய மாணவர் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
டீப் ஸ்டேட்டின் திட்டமிட்ட செயல் மற்றும் மூளைச்சலவையின் விளைவாக அடுத்தடுத்த தலைமுறைகள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இது விழித்தெழுந்து கட்டுப்பாட்டை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நேரம். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு கருத்துச் சுதந்திரமும் உண்மையும் மிக அவசியமானவை என்றாலும் அவை இந்திய பாரம்பரியத்தை மீறாததாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.
















