இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை டவுன் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்களில் மட்டுமே தரிசன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற மதத்தை சேர்ந்த கடவுள்களை வழிபடுவதற்கு எந்த ஒரு தரிசன கட்டணமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து தமிழக முழுவதும் உள்ள கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
















