பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது - ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!
Jul 27, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாக காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியின் பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி – பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன் ராஜா, ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ராஜாவின் சாதனையை கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோர், தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2018, 2022ல் காமன்வெல்த் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெற முடியவில்லை என்றும், தற்போது வெற்றி பெற்று வெள்ளி வென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜாவின் சகோதரர் சுரேஷ்குமார், சிறுவயதில் இருந்து தானும் தம்பியும் கபடி விளையாடியதாகவும், பின்னர்தான் பளுதூக்குதல் பயிற்சி பெற்றோம் எனவும் கூறினார்.

தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று ராஜா பல்வேறு பதங்களை பெற்றதாகவும், தம்பியின் தொடர் முயற்சி காரணமாக வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தம்பியின் லட்சியம் என சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய பயிற்சியாளர் சொர்ணமுத்து பாண்டியன், 1999ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதாக கூறினார். தனது மாணவர் ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Tags: ThoothukudiCommonwealth Games.weightlifter Raja Muthupandiweightlifter Raja Muthupandi parentsSankaralingapuram
ShareTweetSendShare
Previous Post

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Next Post

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

Related News

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies