தங்கம் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை இந்திய மக்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் பாக்டோக்ராவில் பேசிய அவர், அந்நியச் செலாவணி கையிருப்பை தங்கத்தின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தாமல், சேமிப்புகளை உற்பத்தி சார்ந்த முதலீடுகளில் செலுத்த பிரதமர் வலியுறுத்தியதாகக் கூறினார்.
தங்க இறக்குமதி குறைந்ததால் சர்வதேச தங்க விலையிலும் தாக்கம் ஏற்பட்டதாகவும், இதற்காக மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
















