கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் வழக்கின் கோப்புகள் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் வைரலான நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதன் பேரில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த அவரிடம் காவல்துறையினர் முக்கிய கோப்புகளை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட சிருஷ்டி சிங் வழக்கின் நிலை மற்றும் விசாரணையில் எம்.எல்.ஏ-வின் ஒத்துழைப்பு குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
















