விரைவில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடங்க இருக்கிற நிலையில் மாணவர்கள் மத்தியில் இருக்கிற மிகப்பெரிய சந்தேகம் இது என்றே சொல்லலாம்.
காரணம், இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி போன்ற நிறுவனங்களில் BTech பட்டம் வழங்கப்படுகிறது பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்களும் BTech பட்டத்தையே வழங்குகின்றன. என்றாலும் BE என்பது காலகாலமாக இருந்து வருகிற ஒரு படிப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை BE, BTech ஆகிய இரண்டு படிப்புகளுமே உள்ளன. எனவே, கவுன்சிலிங் நேரத்தில் மாணவர்கள் இதில் எது சிறந்தது என்று விவாதம் நடத்துகிற அளவுக்கு போவது உண்டு.
இவை இரண்டுமே சமம்தான். ECE, EEE போன்ற Engineering என்று முடியும் படிப்புகளுக்கு BE பட்டமும் IT, Food Technology போன்ற Technology என்று முடியும் படிப்புகளுக்கு BTech பட்டத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
எனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளின் அடிப்படையில் இந்த பட்டத்தின் பெயர் பிரிக்கப்பட்டுள்ளது என்பது தவிர மற்றபடி இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தான் உண்மை.