சென்னை இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்கிய, 15வது நிமிடத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பெனால்டி கார்னரை ஹர்மன்பிரீத் சிங் அற்புதமான கோலாக மாற்றி இந்தியாவை முதல் காலிறுதி ஆட்டம் முடிவில் 1-0 என முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாம் காலிறுதி தொடங்கிய நிலையில் இந்திய அணி, 23 வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் கிடைக்க கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். பந்து பாகிஸ்தான் கோல்கீப்பரின் காலில் பட்ட போதிலும் அவரால் தடுக்க முடியவில்லை. இரண்டாம் காலிறுதி முடிவில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்று வலுவாக இருந்தது.
மூன்றாம் காலிறுதி தொடங்கிய 6 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஜக்ராஜ் சிங் கோலாக மாற்றி பாகிஸ்தானுக்கு அரையிறுதி கனவை நொறுக்கினார். மூன்றாம் காலிறுதி முடிவில் 3-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்றது.
நான்காம் கால் இறுதியில், 55 வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல்கீப்பரை நோக்கி அடித்து, கச்சிதமாக கோலாக மாற்றினார். இதன் மூலம் கடைசி லீக் நிலை ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்தியா 5 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்தியா 5 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணியாக இந்திய அணி விளங்குகிறது.