வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது மற்றும் அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கியுள்ளது.
வெளிநாட்டில் படித்து பட்டம் பெறுவோருக்கான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கி உள்ளது. அந்த நெறிமுறைகளின் படி வெளிநாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இந்தியாவில் அதற்கு இணையான பட்டம் வழங்குவது, அல்லது அந்தப் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான புதிய வரைவு வழிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
புதிய வழிமுறைகள் படி இணையதள மூலம், தபால் முறையில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. மேலும், பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு அதற்கு இணையான தகுதிகள் இங்கு வழங்குவது குறித்தும் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய வழிமுறைகள் குறித்து, கருத்துக்களை செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இணையம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது.