உலக அரங்கில் இந்தியாவை முதன்மையானத் திருமணத் தலமாக காண்பிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா அமைச்சகம் திருமணச் சுற்றுலா திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுலாவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்குச் சாத்தியமுள்ள வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள தம்பதிகளை இந்தியாவில் தங்களின் சிறப்பான நாளைக் கொண்டாட ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணத்தைத் தொடங்க தூண்டுவதன் மூலம், இந்தியாவின் சுற்றுலாவை விரிவுபடுத்த முடியும்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அழகான இடங்ளைக் காண உலகெங்கிலும் உள்ள திருமண ஜோடிகளை நான் அழைக்கிறேன் என்று தெரிவித்தார். இது இந்தியாவின் அன்பான அரவணைப்பு, வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக இருப்பதை உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.
இது உலகெங்கிலும் உள்ள திருமண இடங்களின் மையமாக இந்தியாவை நிலை நிறுத்துவதற்கான ஒரு நோக்கம் ஆகும். இது ஒரு திருமணச் சுற்றுலா தலமாக இந்தியாவின் அழகை வெளிப்படுத்துவது பல்வேறு நம்பமுடியாத தேசத்தின் எண்ணற்ற அம்சங்களைக் காட்டுகிறது.
இந்த திட்டமானது இந்தியாவின் பிரமிக்க வைக்கும் இடங்கள், பழங்கால சடங்குகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், உணவுகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவை உலகம் முழுவதிலும் இருந்து வரும் தம்பதிகளைக் கவரும் திறனைக் கொண்டுள்ளது.