இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சற்று நேரம் தள்ளி வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, மழை நிற்பதற்க்காக அனைவரும் காத்திருந்தனர்.
நேரம் கடந்த நிலையிலும் மழை சற்றும் குறையாமல் பெய்துக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
இந்திய அணி கேப்டன் பூம்ராவிடம் கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை வாங்கிய பும்ரா அந்த கோப்பையை சக வீரர் ரிங்குவிடம் கொடுத்தார். அதை தொடர்ந்து ” நான் கேப்டன்னாக இருந்து இத்தொடரை கைப்பற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் கூறினார். மழையால் போட்டி தடைப்பெற்ற நேரத்தில், இந்திய அணி வீரர்கள் சந்திரய்யன் 3 நிலவில் இறங்கியதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.