டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி சீன-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக உள்ளது .
டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி – 20 மாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதி செய்துள்ளன.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்பதை
தவிர்த்துத் விட்டார். சீன அதிபர் ஷீ ஜின்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீனா இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், மாநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சீன-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை வரும் செப். 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதில் திரிசூல், சூ30 எம்.கே. உள்ளிட்ட பல்வேறு ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.