ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வருகிறார்.
நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமான படையின் போர் விமானங்கள் உள்பட அனைத்து பாதுகாப்பு முகமைகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபற்றி கனடா பிரதமரின் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு செல்ல இருக்கிறார். அவர் வருகிற செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள ஆசியன் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து, அவர் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சிங்கப்பூருக்கு இருதரப்பு பயணம் மேற்கொள்கிறார். இதன்பின், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.
உலகிலுள்ள மக்களின் வருங்காலம் சிறப்பாக அமைவதற்கான பணிகளை கட்டமைப்பதற்காக மற்றும் இன்றைய சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச தலைவர்களுடன் இணைந்து பிரதமர் ட்ரூடோ பணியாற்றுவார். அவர், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஊக்குவிப்பார். பருவநிலை மாற்றம், சர்வதேச நிதி மைய சீர்திருத்தம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் மேம்பட்ட சர்வதேச சுகாதாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அதிகரிப்பதற்காக அவர் பேசுவார் என அறிக்கையில் குறிப்பிட்டது.
ஜி 20 மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ரஷியா அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தனக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கலந்துகொள்வார் என்று புதின் தெரிவித்தார். தற்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்க பதில், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியும் சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவில் நிலவும் பதற்றங்களைக் குறைப்பது பற்றி இருவரும் ஆலோசித்ததாக கூறப்பட்டது.