கேரளாவில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 22, 2023, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

கோட்டயம் மாவட்டத்தின் கிழக்கு மலைப் பகுதியில் பெய்த கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தின் கிழக்கு மலைப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளணி, தலைநாடு ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலை முழுவதும் பாறாங்கற்கள் மற்றும் சேறு நிறைந்து காணப்பட்டது.

இதேபோன்று, கோட்டயம் மாவட்டம் வாகமன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், ஈரட்டுப்பேட்டை-வாகமன் வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மக்கள் வசிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

வெள்ளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் இரண்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும், சத்தப்புழா பகுதியில் சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. ஆனைப்பிலவு பகுதியில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது.

கோட்டயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கோட்டயம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர் மழையின் போது மலைப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

Tags: earth quakekerala earth quake
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies