இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!

தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!  

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 08:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்; கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மேதகு டாக்டர் சமியா சுலுஹு ஹசன், தம்மை “இந்தியக் கல்வியின் தயாரிப்பு” என்று கூறிய அவர்,  இதற்கு ஹைதராபாதில் உள்ள என்.ஐ.ஆர்.டி.யில் தனது ஐ.டி.இ.சி பயிற்சியே காரணம் என்றார். ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தமக்கு வழங்கிய முதல் விருது என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரம் இது என்று  தெரிவித்தார்.

உலகளாவிய வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளது. பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது என்பதையும், சந்தையை விட சமூகத்தை மதிப்பதையும் (லாபத்தை விட மக்கள்) அவர் பாராட்டினார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

55,000 நிறுவனங்கள், 42 மில்லியன் மாணவர்கள் மற்றும் 1.6 மில்லியன் ஆசிரியர்களுடன் இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். கல்வி முறைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெய்சங்கர், டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு கல்வி சார்ந்த கௌரவம் வழங்குவது இந்தியாவுடன் அவருக்கு உள்ள நீண்ட கால தொடர்பு மற்றும் நட்பை அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

கல்வியும் திறன் மேம்பாடும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் என்று கூறினார். இந்தியா, தான்சானியா கல்விக்குழுமத் திட்டத்தின் கீழ் 5000-க்கும்  அதிகமான தான்சானியா நாட்டினர், ஏற்கனவே இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

தான்சானியாவின் சான்சிபார் முதலாவது வெளிநாட்டு ஐ.ஐ.டி.யை அமைக்க விரும்பிய இடமாகும் என்று கூறினார். இந்த நிறுவனம் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மை மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஜி 20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு முழு உறுப்பினராகச் சேர்த்தது இந்திய தலைமைத்துவத்தின் மிக உயர்ந்த வெற்றிகளில் ஒன்றாகும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் கன்வல் சிபல், துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், தான்சானியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள், 15 ஆப்பிரிக்க தூதரகங்களின் தலைவர்கள், பிரமுகர்கள், கல்வியாளர்கள், இந்தியாவில் படிக்கும் தான்சானியா மாணவர்கள் மற்றும் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags: central government ministerJaishankar
Share
Tweet
SendShare
Previous Post

மியான்மரில் வெடிகுண்டு தாக்குதல் 29 பேர் பலி!

Next Post

அமித்ஷாவுடன் தமிழக விவசாய அணி தலைவர் சந்திப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies