குஜராத்தில் "கேசரிய கர்பா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!
Sep 21, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் “கேசரிய கர்பா” நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் நடந்த ‘கேசரிய கர்பா’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காந்திநகரில் உள்ள சஹாய் அறக்கட்டளையால் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி, அறக்கட்டளை சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கேசரிய கர்பா நிகழ்ச்சியை உற்சாகமாகக் கண்டு களித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு 13-ம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். 14-ம் தேதி காந்திநகர் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடியவர், பின்னர் அக்குழந்தைகளை கேமிங் மையத்துக்கு அழைத்துச் சென்று, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். பின்னர், அன்றையதினம் இரவு,  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

15-ம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களைத் திறந்து வைத்தவர், குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மான்சாவைச் சேர்ந்த 12 புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட “சமாவ் ஷஹீத் நினைவகத்தை” திறந்து வைத்து பேசுகையில், சமாவ் கிராமத்தில் உள்ள ஷஹீத் நினைவிடம் தேசபக்தியை வளர்க்கும் புனித இடமாக இருக்கும் என்றார்.

மேலும், ஒரு நூலகத்தையும் திறந்து வைத்தவர், “எனது ஆளுமையைக் கட்டியெழுப்பியதில் புத்தகங்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளன. ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாகிறது. அது ஒருவரின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார். 3 நாள் பயணம் முடிந்து அமித்ஷா இன்று இரவு டெல்லி திரும்புவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: AmitshaGujratKesariya Garba Festiva
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.என்.எஸ் பியாஸ் கப்பல் ஒப்பந்தம்!

Next Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies