ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள் அரசு முறைப் பயணமாக 19-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். இப்பயணத்தின்போது சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் முக்கியத் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுகிறார். முன்னதாக, நேற்று நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அப்போது, சிங்கப்பூரின் நிலைமை மற்றும் இந்தியாவிற்கு சாத்தியமான அம்சங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் பிராந்திய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினேன். எங்களின் ஆலோசனைகள் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஆய்வு செய்து, இந்தியாவிற்கான அவற்றின் தாக்கங்களை மதிப்பீடு செய்தன. கொள்கை உருவாக்கத்தில் எங்கள் தூதர்கள் வழங்கும் நுண்ணறிவு மதிப்புமிக்க உள்ளீடுகள்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை சந்தித்துப் பேசினார்.  இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று காலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களின் விவாதங்கள் நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்தன. இந்த யோசனைகளை ஐ.எஸ்.எம்.ஆர். கூட்டத்தில் அமல்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் 2015-ல் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்ட, ஒரு வரலாற்று உறவை அனுபவித்து வருகின்றன. 2023-ல் இந்திய தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு தரப்பினரும் பல அமைச்சர்களின் தொடர்புகளை மேற்கொண்டனர். இதற்காக சிங்கப்பூர் விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சந்திப்பின் மூலம் இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக, வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சோனின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, ​​வியட்நாம் பிரதமர் பாம்மின் சினை சந்தித்தவர், கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் தலைவரான லீ ஹோவாய் டிரங்க்குடனும் கலந்துரையாடினார்.

மேலும், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த 18-வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட இந்தியா-வியட்நாம் விரிவான மூலோபாய கூட்டுறவின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

Tags: singaporeJaishankar
Share
Tweet
SendShare
Previous Post

தொடர் விடுமுறை: மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு!

Next Post

சிபிஐ-யில் அதிரடி மாற்றம்: என்ன காரணம்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies