தமிழக மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நம் நாடு மதங்களால் பிரிக்கப்பட்டது, நம் மாநிலங்கள் மொழிகளால் பிரிக்கப்பட்டது. நம் மண்டலங்கள் கொங்கு மண்டலம் சோழ மண்டலம் தொண்டை மண்டலம் என சுற்றுச் சூழலால் பிரிக்கப்பட்டது.
நம் மாவட்டங்கள் சமூக சமூக பூகோள அமைப்பால் பிரிக்கப்பட்டது. நம் ஊர்கள் ஜாதிகளால் பிரிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒற்றை தொடர்பு நம் வாழ்வியல் அமைப்பான பாரம்பரியமும் கலாச்சாரமும் பண்பாடும் மட்டுமே.
அந்த ஆகச் சிறந்த பண்பாட்டின் அடையளமாக, நாம் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. வாழ்வின் துன்ப இருள் நீக்கி, நம்பிக்கை விளக்கேற்றி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் மகிழ்ச்சித் திருவிழா தீபாவளி.
இந்த நன்னாளில் தமிழக மக்களும், நம் பாரதத் திருநாட்டின் பிறமாநிலச் சகோதர்களும் சகோதரிகளும், இந்தத் தீபத் திருநாளில் ஒளிமயமான வாழ்வையும், அதில் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்க என்று என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.