சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார இரயிலின் நேரம் மாற்றம் செய்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி டூ தாம்பரம் மின்சார இரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.50 மணிக்குப் பதில் 4.40 மணிக்கு இயக்கப்படும்.
சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே இயக்கப்படும் இரயில் மாலை 4.40 மணிக்குப் பதில் 4.50 மணிக்கும், அதுபோல, 8.35 மணிக்குப் பதில் இயக்கப்படும் இரயில் 8.45 மணிக்கும், சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இரயில் இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்படும் இரயில் 10.05 மணிக்கும் இயக்கப்படும்.
செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்குக் காலை 4.55 மணி இரயில் 4.45 மணிக்கும், மாலை 5.45 இரயில் 6 மணிக்கும், மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இரயில் 6.15 மணிக்கும் புறப்படும்.
அதுபோல, செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்கு இரவு 7.30 மணி இரயில் 9.35 மணிக்கும், இரவு 8.05 மணி இரயில் இரவு 7.55 மணிக்கும், இரவு 8.30 மணிக்குப் புறப்படும் இரயில் 8.20 மணிக்குப் புறப்படும்.
மேலும், காஞ்சிபுரம் டூ சென்னை கடற்கரை இடையே செல்லும் இரயில் காலை 6.10 மணிக்குப் பதில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் என்றும், அரக்கோணம் டூ சென்னை கடற்கரை மாலை 5.50 மணிக்குப் பதில் மாலை 6 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை சரியாக அமைத்துக் கொண்டால், இனிதான பயணமாக அமையும்.