தஞ்சாவூர் மாவட்டத்தில் மீதேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பேராவூரணி மண்ணில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற மனோரா கோட்டை அமைந்துள்ள பகுதி. பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் மட்டுமே 1.20 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கிலோ 52.50 ரூபாயாக இருந்த கொப்பரைத் தேங்காயின் குறைந்த பட்ச ஆதார விலையை 107% உயர்த்தி, தற்போது ஒரு கிலோ 108.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
மட்டை உரிக்கப்பட்ட தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 14.20 இருந்தது, தற்போது ஒரு கிலோ 29.3 ரூபாயாக, கடந்த 9 ஆண்டுகளில் 106 சதவீதம் உயர்ந்துள்ளது. பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக பாஜக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆனால் திமுக, தனது தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காயை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்றும், நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் என்றும் கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல், தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
தஞ்ச்சாவூர் மாவட்டத்தில், 53,577 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,81,295 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,46,421 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,55,312 பேருக்கு, 1,19,233 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி 5,208 கோடி ரூபாய் என பல லட்சம் மக்கள் பயன்படும்படி நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.
ஆனால், காவிரி நீரை குறித்த நேரத்தில் குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவு நெல் கொள்முதல் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 3.3 லட்சம் டன் குறைந்திருக்கிறது.
தஞ்சாவூரின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பாராளுமன்றத்துக்கே செல்வதில்லை. எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. அவர் நிதித்துறையின் மத்திய இணைஅமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளில் ஒரு முக்கியமான சாதனை 2G வழக்கில் இருந்த சாட்சிகளை கலைக்க, விசாரணை அதிகாரிகளை அனுப்பி சாட்சிகளை மிரட்டுவதுதான் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீதேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு. அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் இவர்கள் இருவரும்தான். இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பது போல திமுக நடித்தது.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெல், கரும்பு, வாழைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்வு, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரையை அரசே கொள்முதல் செய்து அரசு கூட்டுறவு மையங்கள் மூலம் விற்பனை, விவசாய நிலங்களை ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தாமல் இருப்பது, பேராவூரணியில் பாதாள சாக்கடை திட்டம், தொழிற்பேட்டை, குளிர்பதனக் கிடங்கு ஆகியவை அமைத்தல், பேராவூரணி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டுத் தரம் உயர்த்தல் என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
ஆட்சிக்கு வந்து 30 மாதங்களில், மக்கள் விரோதச் செயல்பாடுகளையே மேற்கொள்ளும் திமுகவை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் முழுவதுமாகப் புறக்கணிப்போம். விவசாயிகளின் நலன் காக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களையே தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.