ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணி நிர்வாகம் தவறான வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்குப் பஞ்சாப் அணி விளக்கம் அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி மினி ஏலத்தில் ஒரு தவறு செய்ததாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

🚨 Official Update 🚨

Punjab Kings would like to clarify that Shashank Singh was always on our target list. The confusion was due to 2 players of the same name being on the list. We are delighted to have him onboard and see him contribute to our success.

— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023

பஞ்சாப் அணியின் நிர்வாகம் ஷசாங் சிங் என்ற 19 வயது வீரரை எடுப்பதற்குப் பதிலாக அதே பெயரில் உள்ள 32 வயது வீரரை மினி ஏலத்தில் எடுத்து விட்டதாகச் செய்திகள் கிளம்பியது.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. இதைக் கூட சரியாகப் பார்க்காமல் ஏலத்தில் வீரர்களை எடுப்பீர்கள் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தனர்.

மேலும் பஞ்சாப் அணி, தாங்கள் தவறாக வீரரை எடுத்து விட்டதாகவும் அதனை நாங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று ஏலத்தில் முறையிட்டதாகச் செய்திகள் வந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் இதற்கு விளக்கம் ஒன்று அளித்துள்ளது.

அதில், ” சசாங் சிங் என்ற வீரரை நாங்கள் ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் பெயரில் குழப்பம் ஏற்பட்டு விட்டது எனினும் சசாங் சிங் எங்கள் அணியில் இணைந்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் எங்களுடைய வெற்றி பயணத்தில் பங்களிப்பார் என்று நம்புகிறோம் ” என்று குறிப்பிட்டிருந்தது.

பஞ்சாப் அணியின் இந்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்தது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பஞ்சாப் அணி இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் சரியான ஷசாங் சிங்கை தான் ஏலத்தில் தேர்வு செய்து இருக்கிறோம். ஷசாங் சிங் குறித்து நாங்கள் பலமுறை ஆலோசித்தோம். அவர் நல்ல பல இன்னிங்சை விளையாடி இருக்கிறார். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.

அவருடைய திறமையை நாங்கள் காண ஆவலுடன் இருக்கிறோம் என்று பஞ்சாப் அணி மீண்டும் விளக்கம் ஒன்றைக் கொடுத்தது. மேலும் தாங்கள் தேர்ந்தெடுத்த சஷாங் சிங் 32 வயதான வீரர் தான் என்றும் அவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்றும் பஞ்சாப் அணி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Tags: ipl auctionipl 2024punjab ipl team
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும்! – அண்ணாமலை

Next Post

பொன்முடி பதவி இழப்பு : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies