திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய சுபகாரியம் ஆகும். அதை சிறப்பாக செய்யவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவர். திருமணம் நிகழும் இடம், நல்ல உணவு, விலை உயர்ந்த ஆடை என ஆடம்பரம் மிகுந்த ஒரு நிகழ்வாக இது பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருமணத்திற்கென விலை உயர்ந்த ஆடை அணிந்த பாலிவுட் பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.
நடிகை ஆலியா பாட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது . இந்த திருமண நிகழ்வு இணையத்தில் பேசும்பொருளானது. இதில் ஆலியா அணிந்திருந்த மென்மையான வெள்ளை நிற லெஹங்காவின் விலை 50 லட்சம் ஆகும். பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி இதனை வடிவமைத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிகர் விக்கி கோஷலை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் செய்தார் . இதில் கத்ரீனா அணிந்திருந்த சிவப்பு நிற திருமண லெஹங்கா ஆடையின் விலை 17 லட்சம் ஆகும். பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி, இந்த விலை உயர்ந்த ஆடையை வடிவமைத்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இதில் தீபிகா அணிந்திருந்த சிவப்பு நிற கிரிம்சன் தங்க பாரம்பரிய லெஹங்காவின் விலைமதிப்பு 12 லட்சம் ஆகும்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜிதான், இந்த விலை உயர்ந்த ஆடையை வடிவமைத்துள்ளார்.
முன்னால் உலக அழகியான பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இதில் பிரியங்கா அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவின் விலைமதிப்பு 18 லட்சம் ஆகும். பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜிதான், இந்த விலை உயர்ந்த ஆடையையும் வடிவமைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் மிகப்பிரமாண்டமாக தெற்கு இத்தாலியில் நடைபெற்றது. இதில் நடிகை அனுஷ்கா அணிந்திருந்த இலச்சிவப்பு (pink )நிற லெஹங்காவின் விலைமதிப்பு 30 லட்சம் ஆகும். அனுஷ்க்காவின் திருமண லெஹங்காவையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்துள்ளார்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது . இந்த திருமண நிகழ்வு இணையத்தில் பேசும்பொருளானது. இதில் கியாரா அணிந்திருந்த மென்மையான இளசிவப்பு (pink) நிற லெஹங்காவின் விலை குறிப்பிடப்படவில்லை. பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா இதனை வடிவமைத்துள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான்னின் திருமணம் மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை கரீனா கபூர் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடை ரூபாய் 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரித்து குமார் வடிவமைத்துள்ளார்.
நடிகை சோனம் கபூரின் திருமணம் ஆடை கிட்டத்தட்ட 6- மாதம் நெய்யப்பட்டதாம். சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் தாமரை மலர் பதித்து தங்கம், வெள்ளி நூல் கொண்டு நெய்த இந்த லெஹங்காவின் விலை சுமார் 70 முதல் 90 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறுகின்றனர். பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனுராதா வக்கீல் இந்த விலை உயர்ந்த லெஹங்காவை வடிவமைத்துள்ளார்.
உலக பணக்காரர்களில் 15-வது இடத்திலும், இந்தியா பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பார்ப்போர் கண்களை வியக்கவைக்கும் ஒரு பிரமாண்ட திருமண விழாவாக இது அமைத்தது. இதில் ஈஷா அம்பானி அணிந்திருந்த சந்தனம் மற்றும் நிவப்பு நிறம் துப்பட்டா கொண்ட லெஹங்கா விலங்கின் தந்தம் மற்றும் தங்கதால் ஆனது. இந்த தந்தம் மற்றும் தங்கநிற, பதினாறு பேனல்கள் கொண்ட லெஹங்காவை கையால் செய்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஷிலா. இதன் விலைமதிப்பு 90 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தாய் நீட்டா அம்பானியின் பழைய திருமணம் சேலையை சேர்த்து துப்பட்டாவாக நெய்து அணிந்திருந்தார் நீட்டா அம்பானி.