காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், தடங்கல் இன்றி, பாரமுல்லா – பனிஹால் இடையே இரயில் சேவை தொடர்கிறது. இது தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து உள்ளது.
காஷ்மீரில் இம்முறை பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
காஷ்மீரின் பெரும்பாலான சுற்றுலா தல பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், தடங்கல் ஏதுமின்றி, இரயில் சேவை தொடர்கிறது. இதுதொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காஷ்மீரின் பாரமுல்லா – பனிஹால் இடையே, இரயில் சேவையில் தடை ஏதுமின்றி, கொட்டும் பனிக்கு மத்தியில், இரயில் ஒன்று செல்கிறது. உடலை உறைய வைக்கும் குளிருக்கு மத்தியிலும், இரயில்வே ஊழியர்கள் தங்களுடைய கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.