படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக ஒரு வாரமாக நடுக்கடலில் சிக்கித்தவித்த 11 பணியாளர்களை ஐசிஜி விக்ரம் கப்பல் வீரர்கள் மீட்டனர்.
மினிகாய் தீவுக்கு மேற்கே 280 கடல் மைல் தொலைவில் IFB கிங்கின் படகு (IND-TN-12-MM-6466)ஒன்று எஞ்சின் கோளாறு காரணமாக பிப்ரவிரி 5ஆம் தேதி முதல் சிக்கித்தவித்தது. இந்நிலையில் ரோந்து பணியல் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரம், படகில் சிக்கித்தவித்த 11 பணியாளர்களை பத்திரமாக மீட்டது.
மேலும் மினிகாய் தீவுக்கு மேற்கே 280 கடல் மைல் தொலைவில் இருந்து படகு பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டு, ஐசிஜிஎஸ் மினிகாய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அரேபிய கடலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலுக்கு உள்ளான பின்னர், இந்தியாவுக்குச் சென்ற மற்றொரு வணிகக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படை கப்பல் விக்ரம் மீட்டது குறிப்பிடத்தக்கது.