இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!
Sep 10, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸ், முதல் பேட்டிங் முடிவில், இந்தியா 445 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆகினார்.

தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 33/3 என்ற கணக்கில் இருந்தது.

அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா – ஜடேஜா கூட்டணி மிதமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 14 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 131 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக ஆட்டத்தில் 62 ரன்களை அசத்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்ககள் என இதுவரை 110 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் குலதீப் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய துருவ் ஜூரெல்3 சிக்சர்கள், 2 பௌண்டரீஸ் எடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் அஸ்வின் 37 ரன்களிலும், பும்ரா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் இந்தியா 445 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மார்க்வுட் 4 விக்கெட்களை எடுத்துள்ளார். ரெஹான் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜோ ரூட், டாம் ஹார்ட்லீ, ஆண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags: Indiaindia cricket teamindia vs england
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

சர்பராஸ் கானிடன் தனது வருத்தத்தை தெரிவித்த ஜடேஜா!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies