உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரத பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதில் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். இவருடன் இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய பாரத பிரதமர் “காலத்தை விட பழமையானது என்று அழைக்கப்படும் காசி, அதன் அடையாளத்தை இளம் தலைமுறையினர் பொறுப்புடன் மேம்படுத்தி வருகின்றனர். இந்த காட்சி என் மனதை திருப்திப்படுத்துகிறது. என்னை பெருமைப்படுத்துகிறது மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
அமிர்த காலால் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் காசியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம் அனைத்தும் காபி டேபிள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
காசி வேகமாக மாறியுள்ளது. இதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள், இதுவே காசியின் திறன் இதுதான் காசி மக்களின் மரியாதை இது மகாதேவனின் ஆசீர்வாதத்தின் சக்தி” என கூறினார்.