பாஜக கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, மார்ச் 20-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. முன்னதாக, தமிழக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.
இந்த நிலையில், பாஜக தலைமையகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்திற்கு, இன்று த.ம.மு.க. நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் வருகை தந்தார்.
அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, த.ம.மு.க. நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், பாஜக கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.