ஜப்பான் அருகே தென் கொரியக் கொடியுடன் கூடிய கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாயமான 7 பேரை கடலோரக் காவல்படையினர் தேடி வருகின்றனர்.
தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, 11 பேருடன் ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக, கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 ஊழியர்களை மீட்டனர்.
7 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேரும், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேரும், சீனாவைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளனர்.