2024 இந்தியன் பிரீமியர் லீக் நாளை தொடக்கம். தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகள் நேருக்கு நேர் விளையாடிவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 வது முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 முறையும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 முறை வெற்றி வாகை சூடியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 முறை வெற்றி பெற்றுள்ளது.
அதுவும் 2008 ஆம் ஆண்டு பெங்களூரு அணி சென்னையில் வெற்றி பெற்றது. கடந்த 16 வருடங்களில் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் ராயல் ச்சல்லேங்கர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று வெற்றியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா, பாஃப் டு பிளெசீ தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெறுமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.