மக்களவைத் தேர்தல் : தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!
Sep 9, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் : தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Apr 19, 2024, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருக்கும் பட்சத்தில், அப்போது வரை உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார்.

தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன்.

“கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

Tags: Lok Sabha Elections: Voting has started in 21 states including Tamil Nadu!
Share
Tweet
SendShare
Previous Post

வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக செல்லும் நிதி : ராஜ்நாத் சிங்

Next Post

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 வாக்குகள் பதிவு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies