உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வு!- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
Sep 21, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வு!- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக பாரம்பரியக் குழு கூட்டத்தை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்

உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வை பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 7 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்ரி அசௌலே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்தியா முதல் முறையாக உலக பாரம்பரியக் குழு கூட்டத்தை நடத்துகிறது. இது நாளை முதல் 31 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும். உலக பாரம்பரியக் குழு ஆண்டுக்கு ஒரு முறை கூடுகிறது.

உலக பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிப்பதற்கும், உலக பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும் இது நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில், உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் புதிய இடங்களை நியமித்தல், தற்போதுள்ள 124 உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு நிலை அறிக்கைகள், பன்னாட்டு உதவி,  உலக பாரம்பரிய நிதியின் பயன்பாடு போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்துடன், உலக பாரம்பரிய இளம் வல்லுநர்கள் மன்றம் மற்றும் உலக பாரம்பரிய தள மேலாளர்கள் மன்றம் ஆகியவையும் நடைபெறுகின்றன.

மேலும், பாரத மண்டபத்தில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் அமைக்கப்படும். மீட்கப்பட்ட சில கலைப்பொருட்கள் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டதை திருப்பிக் கொண்டுவரப்பட்ட  பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தும்.

இதுவரை 350-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ராணி கி வாவ், படான், குஜராத்; கைலாசா கோயில், எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா; ஹொய்சள கோயில், ஹலேபீடு, கர்நாடகா ஆகிய இந்தியாவின் 3 உலக பாரம்பரிய தளங்களுக்கு அதிவேக அனுபவம் வழங்கப்படும். மேலும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், பழமையான நாகரிகம், புவியியல் பன்முகத்தன்மை, சுற்றுலா தலங்கள், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு துறையில் நவீன முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்த ‘ வியப்பூட்டும்  இந்தியா’ கண்காட்சி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 46th Session of World Heritage Committee!- Prime Minister Modi will inaugurate tomorrow!
Share
Tweet
SendShare
Previous Post

விண்டோஸ் செயலிழப்பு ஸ்தம்பித்த உலகம் பின்னணி என்ன?

Next Post

Insta-வில் விவாகரத்து துபாய் இளவரசி அறிவிப்பு!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies