எப்போது நிறைவேறும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள்? - அண்ணாமலை கேள்வி
Sep 29, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்போது நிறைவேறும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள்? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த எட்டரை வருடங்களாக, அதாவது 102 மாதங்களாக, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

மேலும், கடந்த 18 மாதங்களாக, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வுக் காலப் பணப் பலனையும் வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த 8 ஆண்டுகளில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், சுமார் 93,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும், வயது முதிர்ந்த காலத்தில், மிகக் குறைந்த அளவில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றமே, அகவிலைப்படி உயர்வு வழங்கக் கூறி தீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு, இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் பலமுறை அரசின் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும், வேறு வழியின்றி, பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பதும், அந்த நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, பின்னர் அவர்கள் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதனால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றார்கள். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஓய்வு பெற்றவர்களை அலைக்கழிப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அரசுத் துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசியச் செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக்கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல.

உடனடியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொங்கல் பண்டிகை வரை இழுத்தடித்து, மீண்டும் வழக்கம்போல போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என்று அண்ணாமலை எச்சரித்து உள்ளார்.

Tags: When will the reasonable demands of the transport department employees be fulfilled? - Annamalai question
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கிமில் நிலநடுக்கம்!

Next Post

நாகபஞ்சமியை ஒட்டி பக்தர்கள் வழிபாடு!

Related News

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies