புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் - திமுக, அதிமுகவின் வாக்குகளை பெற முடியுமா?
Mar 22, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் – திமுக, அதிமுகவின் வாக்குகளை பெற முடியுமா?

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 சட்டமன்றத் தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்  என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஆளும் திமுக, ஆண்ட அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அவ்விரு கட்சிகளின் வாக்குகளை எப்படி கவரப் போகிறார் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் கடந்த சில தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, பிரச்சார உத்தி என சீமானின் புதிய முயற்சிகள் நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்த்தியது.

ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தி வரும் சீமான், அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். நடிகர் விஜய்யை தம்பி என நட்பு பாராட்டிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்துடன் நிச்சயம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என கூறப்பட்டது. சீமானின் அடுத்தடுத்த பேட்டிகளும் அதனை உறுதிபடுத்தும் வகையிலேயே அமைந்தன.

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து தான் போட்டி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருப்பது சொந்தக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சந்திக்கும் முதல் தேர்தலான சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்திக்க முடிவு செய்திருப்பதே சீமானின் தற்போதைய அறிவிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்துவதற்கு திமுக அரசு சார்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்துவதில் விஜய் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளை பெறலாம் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வாக்குகள் எந்த கட்சியிலிருந்து பிரியப் போகிறது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

திமுக அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்காக மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதும் நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியையும் தனது பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்ற தகவலும் கசிந்திருக்கிறது. கட்சி தொடக்க அறிவிப்பிலிருந்து தற்போது வரை அரசியல் பேசாத விஜய், தனது கட்சி முதல் மாநாட்டில் அதிமுக, திமுகவை விமர்சிப்பார் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளும் அதிமுக, திமுகவை ஒட்டியே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என பரவிய தகவலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டி என அறிவித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அவ்விரு கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை எவ்வாறு அறுவடை செய்யப்போகிறார் என்பதற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளே பதிலாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: Naam Tamilar katchiDMKVijayseemanaiadmk
ShareTweetSendShare
Previous Post

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் – ஜாமின் கோரி முகேஷ், சித்திக் மனு தாக்கல்!

Next Post

விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies