தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரிதாபாத் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 70 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட 50 டன் எடை கொண்ட விநாயகர் சிலையை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த சிலையை, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இதேபோல, பாலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலமு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஹைதராபாத் கணபதிக்கு படைக்கப்பட்ட லட்டு 27 லட்சம் ரூபாய்க்கும், பாலாப்பூர் கணபதிக்கு படைக்கப்பட்ட லட்டு ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.