பொறியாளர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துளளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொறியாளர்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தொலைநோக்கு பார்வையாளர்கள் என தெரிவித்துள்ளார். சிந்தனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வணக்கம் என்றும், பொறியாளர்களை சிறந்து விளங்கச் செய்ய உத்வேகம் தரும் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.