திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
வழுதலம்பேடு பகுதியில் அமைந்துள்ள எட்டியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழாவின்போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.