நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஆசிரியை உயிரிழந்தார்.
குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள ரவி என்பவரது குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்து மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பள்ளி ஆசிரியையான ரவியின் மனைவி ஜெயலட்சுமியை மண் முற்றிலுமாக மூடியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த ஜெயலட்சுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஜெயலட்சுமியின் உடலை மீட்ட மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.