திருச்சி மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு கும்மியடித்து கொண்டாடினர்.
மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராசிபுரம் விவேகானந்த நகர், தர்முநகர் ஆகிய பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பணியாளர்கள் வேலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மேலும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.