விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுத்தொட்டியாங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மலர் சந்தையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கும் விவிஆர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், விவிஆர் காலனி வழியாக சென்றுகொண்டிருந்த முனியாண்டியை, முத்துப்பாண்டி மற்றும் அவரது கூட்டாளியான அருண் ஆகிய இருவர் வழிமறித்து கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.